இந்தியா அசத்தல் பந்துவீச்சு...வெஸ்ட் இண்டீஸ் 159 ரன்கள் சேர்ப்பு...!

இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

Update: 2023-08-08 16:09 GMT

Image Courtesy: AFP

கயானா,

இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது. இந்த தொடரில் முதல் இரு ஆட்டங்களில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்று தொடரில் 2-0 என முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 3வது டி20 போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்துக்கான டாசில் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதையடுத்து தொடக்க ஆட்டக்காரர்களாக பிரண்டன் கிங், கைல் மேயர்ஸ் ஆகியோர் களம் இறங்கினர்.

இதில் மேயர்ஸ் 25 ரன்னிலும், அடுத்து களம் இறங்கிய ஜான்சன் சார்லஸ் 12 ரன், பூரன் 20 ரன் எடுத்தும் ஆட்டம் இழந்தனர். சிறிது நேரம் நிலைத்து நின்று ஆடிய கிங் 42 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இதையடுத்து ரோவ்மன் பவல், ஹெட்மையர் ஜோடி சேர்ந்தனர்.

இதில் ஹெட்மைய 9 ரன்னில் அவுட் ஆனார். இதையடுத்து ரோமேரியோ ஷெப்பர்ட் பவலுடன் ஜோடி சேர்ந்தார். இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி ஆட உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்