பெங்களூரு அணிக்கு எதிரான போட்டி: பவுலிங் பயிற்சி செய்த தோனி..வைரல் வீடியோ

18-ம் தேதி நடைபெற உள்ள ஆட்டத்தில் பெங்களூரு - சென்னை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன

Update: 2024-05-16 17:03 GMT

பெங்களூரு,

ஐ.பி.எல். தொடரில் வரும் 18-ம் தேதி நடைபெற உள்ள 68-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டிக்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஏனெனில் பிளே ஆப் சுற்றுக்கு கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகள் ஏற்கனவே தகுதி பெற்று விட்டன. அதே போல மூன்றாவது அணியாக ஐதராபாத் இன்று பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது.எனவே 18-ம் தேதி நடைபெறும் இந்த போட்டியில் வென்று 4-வது அணியாக பிளே ஆப் சுற்றுக்கு சென்னை செல்லுமா? அல்லது பெங்களூரு தகுதி பெறுமா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்படுகிறது.

பெங்களூரு அணி வெற்றி பெற்றாலும் ரன் ரேட்டை உயர்த்த வேண்டும். அதற்கு 18 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்த வேண்டும் அல்லது சேசிங் செய்தால் 18.1 ஓவர்களில் இலக்கை எட்ட வேண்டும். இந்த போட்டிக்கு தயாராகும் வகையில் இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், பெங்களூரு அணிக்கு எதிரான போட்டி முன்னிட்டு தோனி இன்று பவுலிங் பயிற்சி செய்தார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்