இந்த சீசன் நாங்கள் நினைத்ததுபோல் முடியவில்லை என்றாலும்... - சுப்மன் கில் உருக்கம்

10 அணிகள் கலந்து கொண்டுள்ள 17வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

Update: 2024-05-17 03:12 GMT

image courtesy: AFP / @ShubmanGill

அகமதாபாத்,

10 அணிகள் கலந்து கொண்டுள்ள 17வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை நடந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி உள்ளன.

மீதமுள்ள ஒரு இடத்திற்கு சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. குஜராத் டைட்டன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறாமல் வெளியேறின.

இந்நிலையில் பிளே ஆப் சுற்றிலிருந்த வெளியேறிய குஜராத் அணி கேப்டன் சுப்மன் கில் தனது எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில் உருக்கமாக வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது, இந்த சீசன் நாங்கள் நினைத்ததுபோல் முடியவில்லை என்றாலும், நிறைய பாடங்கள், நிறைய நினைவுகள் கிடைத்துள்ளன.

இந்த அழகான குடும்பத்தில் 3 ஆண்டுகள் பயணித்துள்ளேன். இதை என்றும் மறக்க மாட்டேன். கடினமான நேரங்களிலும் அன்பை பொழிந்த ரசிகர்களுக்கு நன்றி. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்