ஐ.பி.எல்; பெங்களூருவின் சாதனையை சமன் செய்த ஐதராபாத்

ஐதராபாத் இறுதிப்போட்டிக்கு முன்னேறியதன் மூலம் பெங்களூருவின் சாதனை ஒன்றை சமன் செய்துள்ளது.

Update: 2024-05-25 05:52 GMT

Image Courtesy: AFP 

சென்னை,

சென்னையில் நேற்று நடைபெற்ற 2வது தகுதிசுற்று ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் குவித்தது. ஐதராபாத் தரப்பில் கிளாசென் 50 ரன்கள் எடுத்தார். ராஜஸ்தான் தரப்பில் பவுல்ட், அவேஷ் கான் ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து 176 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ராஜஸ்தான் அணி ஐதராபாத்தின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 20 ஓவர்கள் முழுமையாக பேட்டிங் ஆடிய ராஜஸ்தான் அணி 7 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 36 ரன் வித்தியாசத்தில் ஐதராபாத் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இந்நிலையில் இந்த போட்டியில் வெற்றி பெற்று ஐதராபாத் இறுதிப்போட்டிக்கு முன்னேறியதன் மூலம் பெங்களூருவின் சாதனை ஒன்றை சமன் செய்துள்ளது. அந்த சாதனை என்னவெனில் ஐ.பி.எல். வரலாற்றில் அதிக முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறிய அணிகளின் சாதனை பட்டியலில் பெங்களூருவை (3 முறை) ஐதராபாத் அணி (3 முறை) சமன் செய்துள்ளது.

ஐ.பி.எல் வரலாற்றில் அதிக முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறிய அணிகள்;

1.) சென்னை சூப்பர் கிங்ஸ் - 10 முறை

2.) மும்பை இந்தியன்ஸ் - 5 முறை

3.) கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - 4 முறை

4.) ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - 3 முறை

5.) சன்ரைசர்ஸ் ஐதராபாத் - 3 முறை

Tags:    

மேலும் செய்திகள்