ஐ.பி.எல். வரலாற்றில் தோனியின் சாதனையை தகர்த்து புதிய சாதனை படைத்த கே.எல். ராகுல்

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற சென்னைக்கு எதிரான ஆட்டத்தில் கே.எல். ராகுல் 82 ரன்கள் அடித்தார்.

Update: 2024-04-20 10:29 GMT

லக்னோ,

10 அணிகள் பங்கேற்றுள்ள நடப்பு ஐ.பி.எல். சீசனின் 34-ஆவது லீக் போட்டியானது நேற்று லக்னோ நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கே.எல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் மோதின. இதில் சென்னை அணி தோல்வியடைந்தது.

இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சி.எஸ்.கே. அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்களை குவித்தது. சென்னை அணி தரப்பில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 57 ரன்களையும், ரஹானே 36 ரன்களையும், இறுதி கட்டத்தில் களமிறங்கிய தோனி 9 பந்துகளில் 28 ரன்களையும் குவித்து அசத்தினர்.

பின்னர் 177 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய லக்னோ அணியானது 19 ஓவர்களின் முடிவில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 180 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் லக்னோ அணி சார்பாக கே.எல் ராகுல் 82 ரன்களையும், குவிண்டன் டி காக் 54 ரன்களையும் குவித்து அசத்தினர்.

லக்னோவின் இந்த வெற்றிக்கு 82 ரன்கள் அடித்து முக்கிய பங்காற்றிய கே.எல் ராகுல் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

மேலும் இப்போட்டியில் அடித்த அரை சதத்தையும் சேர்த்து ஐ.பி.எல். தொடரில் விக்கெட் கீப்பராக கே.எல் ராகுல் இதுவரை 25 முறை 50-க்கும் ஏற்பட்ட ரன்கள் அடித்துள்ளார். இதன் வாயிலாக ஐ.பி.எல். வரலாற்றில் அதிக முறை 50-க்கும் மேற்பட்ட ரன்கள் அடித்த விக்கெட் கீப்பர் என்ற தோனியின் சாதனையை உடைத்து கே.எல். ராகுல் புதிய சாதனை படைத்துள்ளார்.

அந்த பட்டியல்:

1. கேஎல் ராகுல் : 25 முறை

2. எம்எஸ் தோனி : 24 முறை

3. குவிண்டன் டி காக் : 23 முறை

4. தினேஷ் கார்த்திக் - 21 முறை

5. ராபின் உத்தப்பா - 18 முறை

Tags:    

மேலும் செய்திகள்