ஸ்டோக்ஸ், ஹர்த்திக் அல்ல...தற்போது உலகின் சிறந்த ஆல்ரவுண்டர் இவர் தான் - மைக்கேல் வாகன் தேர்வு செய்த வீரர்

இந்தியா - இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது.

Update: 2024-01-28 03:39 GMT

Image Courtesy: AFP

ஐதராபாத்,

இந்தியா - இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 246 ரன்கள் எடுத்தது. இதையடுத்து தனது முதல் இன்னிங்சை ஆடிய இந்திய அணி ஜெய்ஸ்வால், ராகுல், ஜடேஜா ஆகியோரின் அரைசதத்துடன் 436 ரன்கள் எடுத்தது.

190 ரன்கள் பின்னிலையுடன் தனது 2வது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி 3ம் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 316 ரன்கள் எடுத்து 126 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. 4ம் நாள் ஆட்டம் இன்று நடைபெற உள்ளது. இந்திய அணி தரப்பில் பேட்டிங்கிலும், பந்துவீச்சிலும் சிறப்பாக செயல்பட்டு வரும் ஜடேஜா இந்த டெஸ்டில் இதுவரை 87 ரன் மற்றும் 4 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.

இந்நிலையில், இங்கிலாந்து முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் தற்போது உலகின் சிறந்த ஆல்ரவுண்டர் ஜடேஜா தான் என கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது, ஜடேஜா தற்போது உலகின் சிறந்த ஆல்ரவுண்டராக இருக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்