3வது டி20: இந்தியா அசத்தல் பந்துவீச்சு..தென் ஆப்பிரிக்கா 117 ரன்களுக்கு ஆட்டமிழப்பு

இந்திய அணியில் அர்ஷ்தீப் சிங் , ராணா , வருண் சக்கரவர்த்தி , குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.;

Update:2025-12-14 20:54 IST

தர்மசாலா,

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் கட்டாக்கில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்தியா 101 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நியூசண்டிகாரில் நடந்த 2-வது ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா 51 ரன் வித்தியாசத்தில் வெற்றி கண்டு பதிலடி கொடுத்தது. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

இந்த நிலையில் இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மலைவாசஸ்தலமான தர்மசாலாவில் உள்ள இமாசலபிரதேச மாநில கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்தது. ரன்களை குவிக்க முடியாமல் தென் ஆப்பிரிக்கா அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

தொடக்க வீரர்களாக குயின்டன் டி காக் , ரீசா ஹென்ரிக்ஸ் களமிறங்கினர். தொடக்கத்தில் ரீசா ஹென்ரிக்ஸ் ரன் எதுவும் எடுக்காமல் அர்ஷ்தீப் சிங் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.  பின்னர் டி காக் 1 ரன்களிலும், பிரேவிஸ் 6 ரன்களிலும் ராணா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து வந்த ஸ்டப்ஸ் 9 ரன்களிலும், டானவன் பெரேரா 20 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். தென் ஆப்பிரிக்கா அணியில் மார்க்ரம் மட்டும் அதிரடியாகி விளையாடி அரைசதமடித்து அசத்தினார். அவர் 61 ரன்களில் ஆட்டமிழந்தார்.

மற்ற வீரர்கள் சொற்ப இலக்க ரன்களில் வெளியேறினர். இறுதியில் தென் ஆப்பிரிக்கா 117 ரன்களில் ஆட்டமிழந்தது. இந்திய அணியில் அர்ஷ்தீப் சிங் , ராணா , வருண் சக்கரவர்த்தி , குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். 

Tags:    

மேலும் செய்திகள்