ராஜஸ்தான் கலக்கல் பந்துவீச்சு...பெங்களூரு 172 ரன்கள் சேர்ப்பு

பெங்களூரு தரப்பில் அதிகபட்சமாக ரஜத் படிதார் 34 ரன்கள் எடுத்தார்.

Update: 2024-05-22 15:51 GMT

image courtesy: AFP

அகமதாபாத்,

17-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 22-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. 10 அணிகள் பங்கேற்ற இந்த போட்டி இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. இந்த தொடரில் இன்று நடைபெற்று வரும் வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் ஆடி வருகின்றன. இந்த ஆட்டம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கோலி மற்றும் டு பிளெஸ்சிஸ் ஆகியோர் களம் இறங்கினர். இதில் டு பிளெஸ்சிஸ் 17 ரன், கோலி 33 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆகினர்.

இதையடுத்து கேமரூன் க்ரீன் மற்றும் ரஜத் படிதார் ஆகியோர் களம் இறங்கினர். இதில் க்ரீன் 27 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இதையடுத்து களம் புகுந்த மேக்ஸ்வெல் டக் அவுட் ஆனார். இதன் காரணமாக படிதார் உடன் லோம்ரோர் ஜோடி சேர்ந்தார்.

இதில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய படிதார் 22 பந்தில் 34 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இதையடுத்து களம் இறங்கிய தினேஷ் கார்த்திக் 11 ரன்னில் அவுட் ஆனார். இதையடுத்து இம்பேக்ட் வீரராக ஸ்வப்னில் சிங் களம் புகுந்தார்.

இறுதியில் பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் எடுத்தது. பெங்களூரு தரப்பில் அதிகபட்சமாக ரஜத் படிதார் 34 ரன்கள் எடுத்தார். ராஜஸ்தான் தரப்பில் அவேஷ் கான் 3 விக்கெட் வீழ்த்தினார். இதையடுத்து 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி ஆட உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்