சென்னை அணிக்காக சதம் அடித்த முதல் கேப்டன் ருதுராஜ்

லக்னோவுக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 108 ரன்கள் விளாசினார்.

Update: 2024-04-23 20:21 GMT

Image Courtesy : @ChennaiIPL

சென்னை,

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் அரங்கேறிய 39-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி மோதியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி, 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுக்கு 210 ரன்கள் குவித்தது.

இதைத் தொடர்ந்து பேட்டிங் செய்த லக்னோ அணி, 19.3 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 213 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றியை பெற்றது. சென்னை மைதானத்தில் ஒரு அணி விரட்டிப்பிடித்த அதிகபட்ச இலக்கு இதுவாகும்.

லக்னோவுக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 108 ரன்கள் விளாசினார். சென்னை அணிக்காக சதம் அடித்த முதல் கேப்டன் என்ற பெருமையை அவர் பெற்றார். அத்துடன் 27 வயதான ருதுராஜ், சஞ்சு சாம்சனுக்கு பிறகு இளம் வயதில் சதம் கண்ட கேப்டனாகவும் அறியப்படுகிறார். ஒட்டுமொத்தத்தில் ஐ.பி.எல்.-ல் சதம் அடித்த 8-வது கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் ஆவார்.

Tags:    

மேலும் செய்திகள்