டி20 உலகக்கோப்பை: இலங்கை அணிக்கு 145 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது ஆப்கானிஸ்தான்

ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் எடுத்தது.;

Update:2022-11-01 11:20 IST

Image Courtesy: ICC Twitter

பிரிஸ்பேன்,

8-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் சூப்பர் 12 சுற்றுக்கு வந்துள்ள 12 அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.

இதன் முடிவில் இரண்டு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும். தன்படி இன்று நடைபெற்று வரும் முதலாவது ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான், இலங்கை அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

இதையடுத்து அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக குர்பாஸ் மற்றும் உஸ்மான் கானி ஆகியோர் களம் இறங்கினர். முத்ல் விக்கெட்டுக்கு அருமையான தொடக்கம் தந்த இந்த ஜோடி அணியின் ஸ்கோர் 42 ரன்னாக இருந்த போது பிரிந்தது. அந்த அணியில் குர்பாஸ்28 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். இதையடுத்து இப்ராகிம் ஜாட்ரான் களம் புகுந்தார். அதிரடியாக ஆடிய இப்ராகிம் ஜாட்ரான் 22 ரன்னுக்கு அவுட் ஆனார்.

இலங்கை அணியின் சிறப்பான பந்துவீச்சால் ஆப்கானிஸ்தான் அணியினர் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்த வண்ணம் இருந்தனர். அந்த அணியில் உஸ்மான் கானி 27 ரன்னுக்கும், நஜிபுல்லா ஜாட்ரான் 18 ரன்னுக்கும், குல்பதின் நைப் 12 ரன்னுக்கும், கேப்டன் நபி 13 ரன்னுக்கும் அவுட் ஆகினர்.

இறுதியில் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 144 ரன்களே எடுத்தது. அந்த அணி தரப்பில் குர்பாஸ் 28 ரன்னும், உஸ்மான் கானி 27 ரன்னும் எடுத்தனர். இலங்கை அணி தரப்பில் ஹசரங்கா 3 விக்கெட்டும், லஹிரு குமாரா 2 விக்கெட்டும், கசுன் ரஜிதா, டி சில்வா தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து 145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி ஆட உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்