டி20 உலகக்கோப்பை: பாகிஸ்தான் வீரர்களுக்கு பரிசுத்தொகையை அறிவித்த அந்நாட்டு கிரிக்கெட் வாரியம்...எவ்வளவு தெரியுமா?

டி20 உலகக்கோப்பையை பாகிஸ்தான் வெல்லும் பட்சத்தில் வீரர்களுக்கான பரிசுத்தொகையை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

Update: 2024-05-06 10:08 GMT

image courtesy:AFP

கராச்சி,

9-வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஜூன் 1-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடக்கிறது. இதில் பங்கேற்கும் 20 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 28 நாட்கள் நடைபெறும் இந்த தொடரில் மொத்தம் 55 போட்டிகள் நடைபெற உள்ளன.

இதில் பாகிஸ்தான் அணி 'ஏ' பிரிவில் இந்தியா, அயர்லாந்து, கனடா, அமெரிக்கா ஆகிய அணிகளுடன் இடம்பெற்றுள்ளது. பாகிஸ்தான் தனது தொடக்க ஆட்டத்தில் வரும் ஜூன் 6-ந்தேதி அமெரிக்காவுடன் பலப்பரீட்சை நடத்த உள்ளது.

கடந்த டி20 உலகக்கோப்பையில் அசத்திய பாகிஸ்தான் இறுதிப்போட்டி வரை சென்று இங்கிலாந்திடம் தோற்றது. இந்நிலையில் 2024 டி20 உலகக்கோப்பையை வெல்லும் பட்சத்தில் ஒவ்வொரு பாகிஸ்தான் வீரருக்கும் தலா 100,000 டாலர்கள் பரிசாக வழங்கப்படும் என்று அந்நாட்டு வாரியம் அறிவித்துள்ளது. பொதுவாக சாம்பியன் பட்டம் வென்ற பின்பே இப்படி பரிசுகள் அறிவிக்கப்படுவது வழக்கமாகும்.

ஆனால் தங்கள் வீரர்களுக்கு இப்போதே உத்வேகத்தை கொடுக்கும் நோக்கத்தில் பாகிஸ்தான் வாரியம் இந்த அதிரடியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி டி20 உலகக்கோப்பையை வென்றால் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் ஒவ்வொருவரும் இந்திய மதிப்பில் தலா ரூ. 83 லட்சம் பரிசுத்தொகையாக பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்