சேப்பாக்கத்தில் நடைபெறும் சென்னை - ஐதராபாத் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடக்கம்

சென்னை - ஐதராபாத் போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஆன்லைன் மூலம் இன்று காலை தொடங்குகிறது.

Update: 2024-04-25 01:53 GMT

கோப்புப்படம் 

சென்னை,

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் வருகிற 28-ந் தேதி இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 46-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. சேப்பாக்கத்தில் நடைபெறும் 5-வது ஆட்டம் இதுவாகும்.

இந்த நிலையில் சென்னை - ஐதராபாத் போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஆன்லைன் மூலம் இன்று காலை 10.40 மணிக்கு தொடங்கி நடைபெற உள்ளது. PAYTM மற்றும் www.insider.in ஆகிய இணையதளத்தின் வாயிலாக டிக்கெட்டுகளை பதிவு செய்து பெறலாம் என்றும், ஒரு நபருக்கு 2 டிக்கெட் மட்டுமே வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூ.1,700, ரூ.2,500, ரூ.3,500, ரூ.4 ஆயிரம், ரூ.6 ஆயிரம் ஆகிய விலைகளில் டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்