டி.என்.பி.எல்: நெல்லைக்கு 160 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது சேப்பாக் சூப்பர் கில்லீஸ்

முதலில் பேட்டிங் செய்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்துள்ளது.

Update: 2023-06-24 11:31 GMT

image credit: @TNPremierLeague

சேலம்,

8 அணிகள் பங்கேற்றுள்ள 7-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரின் அடுத்தக்கட்ட ஆட்டங்கள் சேலம் வாழப்பாடியில் இன்று (சனிக்கிழமை) தொடங்குகிறது. இன்று இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. அதன்படி, பிற்பகல் 3.15 மணிக்கு தொடங்கிய13-வது லீக்கில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, நெல்லை ராயல் கிங்சுடன் மோதி வருகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பேட்டிங்கை தேர்வுசெய்தது. அதன்படி, அந்த அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய பிரதோஷ் பால் 2 ரன்களும், ஜெகதீசன் 15 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

அடுத்துவந்த பாபா அபராஜித், சிறப்பாக விளையாடி அரைசதம் கடந்தார். அவர் 79 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஹரிஷ் குமார் 20 ரன்களும், சாய்தேவ் 13 ரன்களும் எடுத்தனர்.

இறுதியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்துள்ளது. நெல்லை தரப்பில் பொய்யாமொழி அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனை தொடர்ந்து ௧௬௦ ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெல்லை ராயல் கிங்ஸ் அணி பேட்டிங் செய்ய உள்ளது.  

Tags:    

மேலும் செய்திகள்