நார்வேயில் இந்திய வீராங்கனையிடம் தவறாக நடக்க முயன்ற பயிற்சியாளர் இடைநீக்கம் - நாடு திரும்ப உத்தரவு

நார்வேயில் இருந்து உடனடியாக நாடு திரும்பி, மேல்விசாரணைக்காக நேரில் ஆஜராக வேண்டும் என்று அந்த பயிற்சியாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Update: 2022-06-30 20:02 GMT

புதுடெல்லி,

17 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான உலக கோப்பை கால்பந்து போட்டி இந்தியாவில் உள்ள புவனேஸ்வர், கோவா, நவிமும்பையில் அக்டோபர் 11-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிக்கு தயாராகும் பொருட்டு இந்திய ஜூனியர் பெண்கள் கால்பந்து அணி ஐரோப்பாவில் சுற்றுப்பயணம் செய்து அங்குள்ள அணிகளுடன் மோதுகிறது.

தற்போது இந்திய அணியினர் நார்வேயில் தங்கி இருந்து விளையாடி வருகின்றனர். இந்த நிலையில் இந்திய அணியின் இளம் வீராங்கனையிடம் பயிற்சியாளர் ஒருவர் தவறாக நடக்க முயன்றதாக புகார் எழுந்தது.

இதையடுத்து அகில இந்திய கால்பந்து சம்மேளனத்தை நிர்வகித்து வரும் நிர்வாக கமிட்டி அதிரடியாக நடவடிக்கை எடுத்துள்ளது. சம்பந்தப்பட்ட பயிற்சியாளர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அத்துடன் அவர் நார்வேயில் இருந்து உடனடியாக நாடு திரும்பி, மேல்விசாரணைக்காக நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

சர்ச்சையில் சிக்கி இருக்கும் பயிற்சியாளரின் பெயர் வெளியிடப்படவில்லை. இருப்பினும் அது உதவி பயிற்சியாளர் அலெக்ஸ் அம்புரோஸ் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்