ஹாக்கி
ஆக்கி இந்தியா அமைப்பின் தலைவராக ரஜிந்தர்சிங் நியமனம்

ஆக்கி இந்தியா அமைப்பின் தலைவராக ரஜிந்தர்சிங் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
புதுடெல்லி,

ஆக்கி இந்தியா அமைப்பின் தலைவராக மரியம்மா கோஷி 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் இருந்து வந்தார். அவர் அந்த பதவியில் இருந்து விலகியதை தொடர்ந்து, இந்திய ஆக்கி அணியின் முன்னாள் வீரரும், சீனியர் துணைத்தலைவருமான ரஜிந்தர்சிங் ஆக்கி இந்தியா அமைப்பின் புதிய தலைவராக நேற்று நியமிக்கப்பட்டார்.