ஹாக்கி
ஆக்கியில் 21 கோல் அடித்த இந்திய அணி

ஆசிய ஆக்கி போட்டியில் இந்திய பெண்கள் அணி கஜகஸ்தானுக்கு எதிராக 21 கோல் அடித்து அசத்தியது.
ஜகர்தா,

ஆசிய போட்டியில் 10 அணிகள் இடையிலான பெண்கள் ஆக்கியில் ‘பி’ பிரிவில் அங்கம் வகிக்கும் இந்திய அணி நேற்று தனது 2-வது லீக்கில் 21-0 என்ற கோல் கணக்கில் கஜகஸ்தானை பந்தாடி 2-வது வெற்றியை பெற்றது. இந்திய அணியில் 10 வீராங்கனைகள் கோல் அடித்தனர். அதிகபட்சமாக நவ்னீத் கவுர் 5 கோலும், குர்ஜித் கவுர் 4 கோலும் போட்டனர். ஆசிய விளையாட்டில் இந்தியாவின் 2-வது மிகப்பெரிய வெற்றி இதுவாகும். ஏற்கனவே 1982-ம் ஆண்டு ஆசிய விளையாட்டில் 22-0 என்ற கோல் கணக்கில் ஹாங்காங்கை சாய்த்து இருந்தது குறிப்பிடத்தக்கது.