ஜூனியர் உலக கோப்பை ஆக்கி போட்டியை நடத்தும் வாய்ப்பை பெற்றது ஒடிசா

ஆண்களுக்கான 12-வது ஜூனியர் உலக கோப்பை ஆக்கி போட்டியை நடத்த உத்தரபிரதேசம், ஒடிசா மாநிலங்கள் ஆர்வம் காட்டின. இந்த நிலையில் இந்த வாய்ப்பு ஒடிசாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

Update: 2021-09-23 23:02 GMT
அங்குள்ள புவனேஸ்வர் நகரில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் நவம்பர் 24-ந்தேதி முதல் டிசம்பர் 5-ந்தேதிவரை இந்த போட்டி நடக்க இருப்பதாக ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக் நேற்று தெரிவித்தார். இதற்கான நிகழ்ச்சியில் அவர் போட்டிக்கான லோகோ மற்றும் கோப்பையையும் வெளியிட்டார். ஜூனியர் உலக கோப்பை ஆக்கியில் இந்தியா, கொரியா, பாகிஸ்தான், பெல்ஜியம், இங்கிலாந்து, பிரான்ஸ், அமெரிக்கா, ஜெர்மனி உள்பட 16 அணிகள் பங்கேற்கின்றன. கொரோனா பயண கட்டுப்பாடு காரணமாக முன்னாள் சாம்பியன் ஆஸ்திரேலியா இந்த போட்டியில் இருந்து ஏற்கனவே விலகி விட்டது.

மேலும் செய்திகள்