தென்மண்டல பல்கலைக் கழக ஹாக்கி போட்டி: கோவில்பட்டி கே.ஆர். கல்லூரி மாணவர்கள் தேர்வு

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக ஆக்கி அணிக்கு தேர்வாகினர்.

Update: 2021-12-24 10:48 GMT
கோவில்பட்டி,: 

பெங்களூர் பல்கலைக்கழகத்தில் இம்மாதம் 27-ஆம் தேதி முதல் 30- ம் தேதி வரை தென்மண்டல பல்கலைக் கழகத்திற்கு இடையேயான ஹாக்கி போட்டி நடைபெறுகிறது.

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக ஹாக்கி அணிக்கு வீரர்கள் தேர்வு போட்டி, நேற்று கோவில்பட்டி அரசு புல்வெளி ஹாக்கி மைதானத்தில் நடந்தது. கோவில்பட்டி கே. ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் நிஷி தேவஅருள், ஆஸ்டின், கருணாமூர்த்தி, அரவிந்த் குமார் ஆகியோர் தேர்வு செய்யப் பட்டார்கள்.

பல்கலைக்கழக ஹாக்கி அணிக்கு தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் நிஷி தேவஅருள், ஆஸ்டின், கருணாமூர்த்தி, அரவிந்த் குமார் ஆகியோரை கல்லூரி தலைவர் சென்னம்மாள் ராமசாமி, துணைத் தலைவர் கே.ஆர்.கிருஷ்ணமூர்த்தி, செயலாளர் கே.ஆர். அருணாச்சலம், முதல்வர் மதிவண்ணன், உடற்கல்வி இயக்குனர் ராம்குமார் ஆகியோர் பாராட்டினார்கள்.

பல்கலைக்கழக ஹாக்கி அணிக்கு தேர்வு செய்யப்பட்ட நிஷி தேவஅருள் தேசிய ஜூனியர் ஹாக்கி போட்டியில் தமிழ்நாடு அணியின் கேப்டனாகவும், மாணவர் அரவிந்த் குமார் அணியின் முன்னணி வீரர் ஆகவும் ஆடியது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்