தேசிய பளுதூக்குதல்: மராட்டிய வீராங்கனை அகாங்ஷா புதிய சாதனை
தேசிய பளுதூக்குதல் போட்டியில் மராட்டிய வீராங்கனை அகாங்ஷா தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.;
காசியாபாத்,
கேலோ இந்தியா தேசிய ரேங்கிங் பெண்கள் பளுதூக்குதல் போட்டி உத்தரபிரதேசத்தில் உள்ள காசியாபாத்தில் நடந்து வருகிறது. இதில் 40 கிலோ எடைப்பிரிவில் மராட்டிய வீராங்கனை அகாங்ஷா யாவஹரே 'ஸ்னாச்' முறையில் 60 கிலோ 'கிளீன் அண்ட் ஜெர்க்' முறையில் 71 கிலோ என்று ஒட்டுமொத்தத்தில் 131 கிலோ எடை தூக்கி மூன்று பிரிவிலும் புதிய தேசிய சாதனைகளை படைத்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.