உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல்: இந்தியாவுக்கு 2 பதக்கம்

உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி கஜகஸ்தான் நாட்டில் நடந்து வருகிறது.

Update: 2023-05-23 20:29 GMT

கோப்புப்படம் 

அல்மாதி,

உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி கஜகஸ்தான் நாட்டில் உள்ள அல்மாதியில் நடந்து வருகிறது. இதில் பெண்களுக்கான 'ஸ்கீட்' பிரிவு போட்டியின் இறுதி சுற்றில் கஜகஸ்தான் வீராங்கனை அசெம் ஆரின்பே, இந்திய வீராங்கனை கேன்மேட் சேகோன் ஆகியோர் 60-க்கு 50 புள்ளிகள் குவித்து முதலிடத்தில் சமநிலை வகித்தனர்.

இதைத்தொடர்ந்து நடந்த சூட்-ஆப்பில் 2 முறையும் இலக்குகளை குறிதவறாமல் சுட்ட அசெம் ஆரின்பே தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். ஒரு முறை இலக்கை தவறவிட்ட இந்திய வீராங்கனை கேன்மேட் சேகோன் வெள்ளிப்பதக்கத்துடன் திருப்திபட வேண்டியதானது. மற்றொரு இந்திய வீராங்கனை தர்ஷனா ரதோர் 39 புள்ளிகளுடன் வெண்கலப்பதக்கம் பெற்றார்.

ஆண்களுக்கான ஸ்கீட் பிரிவு தகுதி சுற்று முடிவில் இந்திய வீரர்கள் மைராஜ் கான் 16-வது இடமும், குர்ஜோத் கான்குரா 18-வது இடமும், ஆனந்த்ஜீத் சிங் நருகா 19-வது இடமும் பிடித்து இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்து வெளியேறினர். 

Tags:    

மேலும் செய்திகள்