இன்னும் 50 நாட்கள்...புதிய போஸ்டரை வெளியிட்ட ’பராசக்தி’ படக்குழு

'பராசக்தி' திரைப்படம் ஜனவரி 14-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.;

Update:2025-11-25 12:02 IST

சென்னை,

இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் ‘பராசக்தி’. இப்படத்தில் அதர்வா, ஸ்ரீலீலா, ரவி மோகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இப்படம் இந்தி திணிப்பை மையமாக கொண்டு உருவாகி வருவதாக கூறப்படுகிறது.

அடுத்தாண்டு பொங்கல் விடுமுறையையொட்டி ஜனவரி 14-ந் தேதி 'பராசக்தி' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. திரைக்கு வர இன்னும் 50 நாட்கள் உள்ளநிலையில், படக்குழு புதிய போஸ்ட்ரை வெளியிட்டுள்ளது.

அதில், சிவகார்த்திகேயன், ஸ்ரீலீலா, அதர்வா மற்றும் ரவி மோகன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். தற்போது இப்படத்தின் டப்பிங் பணிகளில் ஸ்ரீலீலா, அதர்வா ஆகியோர் ஈடுபட்டு வருகின்றனர். ஸ்ரீலீலா தனது சொந்த குரலில் தமிழில் டப்பிங் செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்