'அவர் அப்படிப்பட்டவர் என்று நான் நினைக்கவே இல்லை...விஷ்ணு பிரியாவின் பரபரப்பு கருத்துகள்
ஜோதிடர் வேணு சுவாமி பற்றி பிரியா தெரிவித்த கருத்துகள் தற்போது வைரலாகி வருகிறது.;
சென்னை,
சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை விஷ்ணு பிரியா, தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்த பரபரப்பான விஷயங்களை பகிர்ந்து கொண்டார். ஜோதிடர் வேணு சுவாமி பற்றி அவர் தெரிவித்த கருத்துக்கள் தற்போது வைரலாகி வருகிறது.
ஜோதிடர் வேணு சுவாமியைப் பற்றி எவ்வளவு விமர்சனங்கள் இருந்தாலும், அவர் செய்த உதவியை ஒருபோதும் தான் மறக்க மாட்டேன் என்று விஷ்ணு பிரியா கூறினார்.
அவர் பேசுகையில், ’எனது தாயார் இறக்கும் தருவாயில் இருந்தபோது, லட்சக்கணக்கில் மருத்துவமனை கட்டணங்களை செலுத்த வேண்டியிருந்தது, யாரிடம் உதவி கேட்பது என்று தெரியவில்லை. அப்போது வேணு சுவாமிதான் உடனடியாக எனக்கு உதவி செய்தார். மூன்று நாட்கள் மட்டுமே என் தாயார் உயிர்வாழ்வார் என்று மருத்துவர்கள் சொன்னார்கள். ஆனால், ஒரு வருடம் உயிர்வாழ்ந்தது அவரால்தான். அவர் இவ்வளவு உதவி செய்வார் என்று நான் உண்மையில் நினைக்கவில்லை. தேவைப்படும் எவருக்கும் உதவ முதலில் வரும் ஒரு நல்ல மனிதர் வேணு சுவாமி’ என்றார். இவரின் இந்தக் கருத்துக்கள் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.