நடிகர் ரஜினிகாந்த் பெங்களூருவுக்கு திடீர் பயணம்

பசவனகுடியில் உள்ள ராமகிருஷ்ணா ஆசிரமத்திற்கு சென்று நடிகர் ரஜினிகாந்த் தியானம் செய்தார்.;

Update:2025-08-14 07:10 IST

பெங்களூரு,

நடிகர் ரஜினிகாந்தின் நடிப்பில் உருவான 171-வது படமான கூலி திரைப்படம் இன்று (வியாழக்கிழமை) திரையிடப்படுகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கிய இப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று வெளியாகிறது.

இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் திடீரென்று நேற்று பெங்களூருவுக்கு சென்றார். வெள்ளை நிற குர்தா, வேட்டி அணிந்து எளிமையாக, பசவனகுடியில் உள்ள ராமகிருஷ்ணா ஆசிரமத்திற்கு சென்றார். அவரை ஆசிரம நிர்வாகிகள் வரவேற்றனர். பின்னர் நடிகர் ரஜினிகாந்த் மடத்தில் சாமி தரிசனம் செய்தார். அத்துடன் சிறிது நேரம் தியானம் செய்தார்.

ரஜினிகாந்த் வந்தது பற்றி தகவல் அறிந்ததும் குழந்தைகள், இளைஞர்கள் என பல்வேறு தரப்பினரும் அங்கு கூடியிருந்தனர். சிலர்  நடிகர் ரஜினிகாந்துடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்