மலேசியா முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்த அஜித்குமார்
மலேசியாவில் உள்ள பத்துமலை முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.;
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக மட்டுமின்றி, ஒரு தீவிர கார்பந்தய வீரராகவும் திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித்குமார். இவர் குட் பேட் அக்லி படத்திற்கு பிறகு கார் ரேசில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். இதற்கிடையில், ‘அஜித்குமார் ரேஸிங்’ என்ற தனது சொந்த கார் பந்தய நிறுவனத்தை உருவாக்கினார்.
இந்தக் கார் பந்தய நிறுவனம் துபாய், பெல்ஜியம் போன்ற நாடுகளில் நடைபெற்ற கார் பந்தயங்களில் கலந்து கொண்டு பரிசுகளையும் வென்றுள்ளது. இந்த அணி ஐரோப்பிய எண்டூரன்ஸ் சாம்பியன்ஷிப்பில் கலந்துகொண்டு மூன்றாவது இடத்தைப் பிடித்து சாதனை படைத்தது.
அதனை தொடர்ந்து அஜித்குமார் அடுத்ததாக மலேசியாவில் 24H என்ற கார் பந்தயத்தில் பங்கேற்க மலேசியா சென்றுள்ளார். அப்போது, மலேசியாவில் உள்ள பத்துமலை முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். இந்த கோவிலில், இவர் நடித்த 'பில்லா' படத்தில் இடம்பெற்ற சேவல் கொடி பறக்குதடா என்ற பாடல் படமாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.