திருவண்ணாமலை கோவிலில் இளையராஜா வழிபாடு

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் இசையமைப்பாளர் இளையராஜா சாமி தரிசனம் செய்தார்.;

Update:2025-12-02 13:57 IST

திருவண்ணாமலை ,

1976 ம் ஆண்டு தேவராஜ்-மோகன் இயக்கத்தில் வெளியான 'அன்னக்கிளி' படத்தின் மூலம் அறிமுகமானவர் இசைஞானி இளையராஜா. தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான இளையராஜா, சினிமாவில் 1,500 படங்களுக்கு மேல் இசையமைத்து சாதனை ராஜாவாக திகழ்ந்து வருகிறார்.

இந்நிலையில், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு இன்று காலை இசைஞானி இளையராஜா வருகை தந்தார். இதையடுத்து விநாயகர், அண்ணாமலையார், மூலவர் உள்ளிட்ட சன்னதிகளை தரிசனம் செய்தார். இதைத் தொடர்ந்து இசைஞானி இளையராஜாவிற்கு திருக்கோவில் நிர்வாகம் சார்பாக மலை அணிவித்து சாமி பிரசாதம் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்