25வது திருமண நாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி: வைரலாகும் வீடியோ

தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படும் ஜோடி அஜித்-ஷாலினி.;

Update:2025-04-25 08:16 IST

சென்னை,

நடிகர் அஜித், நடிகை ஷாலினி இருவரும் முதன்முதலில் ஜோடியாக நடித்த படம் 'அமர்க்களம்'. சரண் இயக்கிய இப்பட படப்பிடிப்பில் ஷாலினி காயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தபோது அஜித் அவரை பாசத்துடன் பார்த்துக்கொண்டார்.

இதனால் ஷாலினிக்கு அஜித் மீது காதல் உருவானது. இதனையடுத்து, கடந்த 2000-ம் ஆண்டில் பெற்றோர் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.

ஷாலினி நடித்த படம் அனைத்தும் 'ஹிட்' ஆகியது. அவருக்கு பட வாய்ப்புகள் வழங்க ஏராளமான தயாரிப்பாளர்கள் காத்து கிடந்தனர். ஆனால், அவர் இனிமேல் சினிமாவில் நடிக்க மாட்டேன் என அறிவித்தார்.

இந்நிலையில், அஜித்- ஷாலினிக்கு திருமணமாகி 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனையடுத்து இவர்கள் ஜோடியாக கேக் வெட்டி தங்களது 25-வது ஆண்டு திருமண நாளை கொண்டாடி மகிழ்ந்தனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்