நடிகர் அக்‌சய் குமார் மகளிடம் ஆன்லைன் விளையாட்டில் அத்துமீறல்

‘தனது மகள் ஆன்லைனில் விளையாடி கொண்டு இருந்த போது, மர்ம நபர் ஒருவர் நிர்வாண புகைப்படத்தை அனுப்புமாறு கேட்டார்’ என நடிகர் அக்சய் குமார் கூறியுள்ளார்.;

Update:2025-10-03 22:31 IST

மும்பை காவல்துறை தலைமையகத்தில் ‘சைபர் விழிப்புணர்வு 2025’ நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பாலிவுட் நடிகர் அக்‌சய் குமார் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர் பல அதிர்ச்சிகரமான தகவல்களை கூறினார். இது குறித்து நடிகர் அக்‌சய் குமார் கூறியிருப்பதாவது: “எனது மகள் கடந்த சில மாதங்களுக்கு முன் ஸ்மார்ட்போனில் ஆன்லைன் கேம் விளையாடிக் கொண்டிருந்தார். அவருடன் இணைந்து உலகின் ஏதோவொரு மூலையில் இருந்தபடி ஆன்லைன் கேமில் பங்கேற்ற ஒருவர், எனது மகளிடம் ‘நீ எங்கிருந்து விளையாடுகிறாய்?’ என்று கேட்டுள்ளார். அதற்கு அவளோ, ‘நான் மும்பையில் இருக்கிறேன்’ என்று பதிலளித்துள்ளார்.தொடர்ந்து இருவரும் விளையாட்டை தொடர்ந்துள்ளனர். அப்போது அந்த நபர் எனது மகளிடம் ‘நீ ஒரு ஆணா? அல்லது பெண்ணா?’ என்று கேட்டுள்ளார். இவள் ‘நான் ஒரு பெண்’ என்று பதிலளித்துள்ளார். அதன்பின் அவர் ஆபாச பதிவுகளை அனுப்பியுள்ளார். அதன்பின் சிறிது இடைவெளிக்குப்பின் அந்த நபர், ‘உனது நிர்வாணப் படத்தைக் காட்டு’ என்று அறிவுறுத்தியுள்ளார்.இதைக் கண்டதும் அதிர்ந்துபோன் எனது மகள் உடனடியாக போனை அணைத்து வைத்துவிட்டு தனது அம்மாவிடம் நடந்தவற்றை தெரிவித்துள்ளார்” என்று அக்‌சய் குமார் பேசினார்.

சைபர் குற்றவாளிகளின் வலையில் குழந்தைகள் சிக்கிக்கொள்ளக்கூடாது என்றும் எச்சரித்துள்ளார். சைபர் குற்றச்செயல்கள் சாதாரண குற்றங்களைவிடப் பெரியவை, அவற்றை நாம் தடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்ட அக்‌சய் குமார், சைபர் பதுகாப்பு குறித்து பள்ளிகளில் 7 வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு சைபர் குற்றங்கள் குறித்து கல்வி போதிக்கப்பட வேண்டும் என்று அவர் விழா மேடையில் அமர்ந்திருந்த மகாராஷ்டிர முதல்வரை வலியுறுத்திக் கேட்டுக்கொண்டார்.

Tags:    

மேலும் செய்திகள்