ஜி.வி. பிரகாஷ் நடித்த 'கிங்ஸ்டன்' படத்தின் டிரெய்லர் குறித்த அறிவிப்பு

ஜி.வி.பிரகாஷ் மற்றும் திவ்யபாரதி இணைந்து நடித்துள்ள 'கிங்ஸ்டன்' படம் வருகிற மார்ச் மாதம் வெளியாக உள்ளது.;

Update:2025-02-25 20:27 IST

சென்னை,

ஜி.வி. பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகும் அவரது 25-வது படத்திற்கு 'கிங்ஸ்டன்' என்று தலைப்பிடப்பட்டு இருக்கிறது. இந்த படத்தை ஜி.வி. பிரகாஷின் பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து உள்ளன. கிங்ஸ்டன் படத்தை இயக்குனர் கமல் பிரகாஷ் எழுதி, இயக்கியுள்ளார். இது ஜி.வி. பிரகாஷ் தயாரிக்கும் முதல் படம்.

இந்த படத்தில் நடிகை திவ்யபாரதி, ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக நடிக்க உள்ளார். பேச்சுலர் படத்திற்கு பிறகு இந்த ஜோடி மீண்டும் இணைந்து உள்ளனர். இந்த படத்தில் சேத்தன், அழகம் பெருமாள், இளங்கோ குமரவேல் என பலர் நடித்திருக்கிறார்கள். இப்படம் மார்ச் 7-ம் தேதி வெளியாக உள்ளது. இதற்கிடையில் இப்படத்தின் பாடல் வெளியாகி வைரலாகி வருகின்றன. 

இந்த நிலையில் தற்போது இப்படத்தின் டிரெய்லர் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, வருகிற 27-ந் தேதி கிங்ஸ்டன் படத்தின் டிரெய்லர் வெளியாக உள்ளது. இது குறித்த பதிவை ஜி.வி.பிரகாஷ் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்