பாலையாவின் “அகண்டா 2” படத்தின் முதல் நாள் வசூல்
‘அகாண்டா 2’ படம் முதல் நாளில் ரூ. 59 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது.;
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் பாலையா. இவர் தெலுங்கு திரையுலகில் இதுவரை 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் சிறந்த தெலுங்கு திரைப்படத்திற்கான தேசிய விருதை இவரது நடிப்பில் வெளிவந்த ‘பகவந்த் கேசரி படத்திற்காக பெற்றது குறிப்பிடத்தக்கது.
பாலகிருஷ்ணா- இயக்குநர் போயபடி ஸ்ரீனு கூட்டணியில் உருவான ‘அகாண்டா 2’ திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படம் 2021-ல் எடுக்கப்பட்ட ‘அகாண்டா’ படத்தின் 2ம் பாகம் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் சம்யுக்தா, ஆதி பினிசெட்டி நடித்துள்ளனர். இப்படம் 3டி தொழில்நுட்பத்தில் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், ‘அகாண்டா 2’ படம் சிறப்புக் காட்சிகள் மற்றும் முதல்நாள் வசூலைச் சேர்த்து ரூ. 59 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.