ஸ்ரீலீலா வெளியிட்ட பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் வைரல்

நடிகை ஸ்ரீலீலா மூன்று மாற்றுத்திறனாளி குழந்தைகளைத் குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.;

Update:2025-06-01 16:12 IST

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் ஸ்ரீலீலா. இவர் 2019-ம் ஆண்டு வெளியான 'கிஸ்' திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இப்படம் 100 நாட்கள் ஓடி மிகப்பெரிய வெற்றியை அளித்தது. இதையடுத்து அவருக்கு கன்னடத்தில் வாய்ப்புகள் குவிந்தன. 2021-ம் ஆண்டு 'பெல்லி சான்டட்' என்ற படத்தின் மூலமாக தெலுங்கில் அறிமுகமானார் ஸ்ரீலீலா. தற்போது பவன்கல்யாண், நந்தமுரி பால கிருஷ்ணா, விஜய் தேவரகொண்டா ஆகியோர் படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இவர் நடித்த பகவந்த் கேசரி, குண்டூர் காரம் ஆகிய படங்கள் வெற்றிபெற்றன. குண்டூர் காரம் படத்தில் 'குர்ச்சி மாடதபெட்டி' பாடலுக்கு குத்தாட்டம் போட்டு ரசிகர்களைக் கிறங்கடித்தார். அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான 'புஷ்பா தி ரூல்' படத்தில் 'கிஸ்சிக்' பாடலில் நடனமாடி கவனத்தை பெற்றார்.தெலுங்கில் நிதினுக்கு ஜோடியாக ராபின்ஹுட் படத்தில் நடித்துள்ளார்.

23 வயதாகும் இவர் தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வருகிறார். சிவகார்திகேயனின் பராசக்தி படம் மூலம் தமிழிலும் அறிமுகமாக உள்ளார். மூன்று மாற்றுத்திறனாளி குழந்தைகளைத் தத்தெடுத்து ஸ்ரீலீலா வளர்த்து வருகிறார்.

சமூக ஊடகங்களில் ஆக்டிவாக இருக்கும் ஸ்ரீலீலா திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது பலரையும் புருவம் உயர்ந்த வைத்துள்ளது. இந்தப் புகைப்படங்கள் ஸ்ரீலீலா மணப்பெண் அலங்காரத்தில் இருப்பதையும், சிலர் அவரது கன்னங்களில் மஞ்சள் தடவுவதையும் காட்டுகின்றன. "இன்று எனக்கு ஒரு பெரிய நாள். விரைவில் முழு விவரங்களையும் நான் உங்களுக்குச் சொல்கிறேன், விரைவில் வருகிறேன்" என்று ஸ்ரீலீலா பதிவிட்டுள்ளதால் அவர் திருமணம் செய்து கொள்ள உள்ளாரா என்ற ஊகங்கள் எழுந்தன.

இந்நிலையில் இதுகுறித்து ஸ்ரீலீலா விளக்கம் அளித்துள்ளார். தனது வீட்டில் நடந்த கொண்டாட்டத்தை பற்றி விளக்கிய அவர், "எனது பிறந்தநாளுக்கு முந்தைய கொண்டாட்டங்களை நாங்கள் வீட்டில் இப்படித்தான் கொண்டாடினோம். இதற்கான அனைத்து திட்டமிடலையும் என் அம்மா கவனித்துக் கொண்டார்" என்று அவர் தனது இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார். இது அவரின் திருமண வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

 

ஸ்ரீ ரீலீலா ஜூன் 14ம் தேதி தனது 24வது பிறந்தநாளைக் கொண்டாட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்