உலக டிரெண்டிங் லிஸ்டில் இடம்பிடித்த 'முத்த மழை' பாடலின் சின்மயி வெர்ஷன்

'முத்த மழை' பாடலின் சின்மயி வெர்ஷன் உலக டிரெண்டிங் லிஸ்டில் 10-வது இடத்தை பிடித்துள்ளது.;

Update:2025-06-17 16:29 IST

சென்னை,

மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'தக் லைப்' படத்தில் முத்த மழை பாடல் இடம் பெற்றுள்ளது. படத்தில் இடம்பெற்றுள்ள பாடலை பாடகி தீ பாடியுள்ளார். ஆனால் 'முத்த மழை' பாடலின் சின்மயி வெர்ஷன்தான் ரசிகர்களை அதிக அளவில் கவர்ந்துள்ளது.

அதாவது, தக் லைப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தீ பாடவிருந்த இப்பாடலை, அவர் வர இயலாததால் சின்மயி பாடி அனைவரையும் கவர்ந்தார். ரசிகர்களும் பாடகி தீ-யை விட சின்மயி தான் சிறப்பாக பாடி இருக்கிறார் என கூறுகின்றனர்.

ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில், சிவா அனந்த் வரிகளில் உருவான இப்பாடல், உலக டிரெண்டிங் பாடல்கள் லிஸ்டில் 10-ம் இடத்தையும், இந்திய டிரெண்டிங் பாடல்கள் லிஸ்டில் 8-ம் இடத்தையும் பிடித்துள்ளது. 

Full View
Tags:    

மேலும் செய்திகள்