தொடர்ந்து சர்ச்சையில் சிக்கிவரும் 'தங்கல்' பட நடிகை
படங்களில் கவர்ச்சி காட்டி நடிக்கும் பாத்திமா சனா ஷேக்கின் சமீபத்திய நடவடிக்கைகள் சர்ச்சைகளை ஏற்படுத்தி இருக்கிறது.;
பாலிவுட் நடிகையான பாத்திமா சனா ஷேக், 'தங்கல்' படத்தில் அமீர்கான் மூத்தமகளாக நடித்து பிரபலமானார். அதன்பிறகு அமீர்கானுடன் இணைந்து கிசுகிசுக்கப்பட்டார். படங்களில் கவர்ச்சி காட்டி நடிக்கும் பாத்திமா சனா ஷேக்கின் சமீபத்திய நடவடிக்கைகள் சர்ச்சைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
பட விழாவில் ஒரு நடிகரை பின்புறமாக வேண்டுமென்றே உரசியது, மைக்கை கையில் வைத்துக்கொண்டு ஆபாச சைகை காட்டியது, உதட்டை காட்டி கெட்ட வார்த்தைகளை உதிர்த்தது என அவர் செய்யும் சேட்டைகள் எல்லை மீறுகிறது.
இதனால் சமூக வலைத்தளங்களில் கொந்தளித்துள்ள ரசிகர்கள், அவரை கண்டபடி வசைபாடி 'கமெண்ட்டுகளை' வீசி வருகிறார்கள். ஆனாலும், இதையெல்லாம் அவர் கொஞ்சம் கூட கண்டுகொள்ளவே இல்லையாம். 'எவ்வளவோ பார்த்துவிட்டோம்', என விஜய் ஸ்டைலில் வசனம் பேசுகிறாராம்.