''தமிழ் பெண்ணைப்போல உணர்ந்தேன்'' - நடிகை அபர்ணா தாஸ்

கன்னியாகுமரிக்கு சென்ற அபர்ணா தாஸ், அங்கு எடுத்துகொண்ட புகைப்படங்களை தனது சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார்;

Update:2025-08-19 06:51 IST

கன்னியாகுமரி,

பிரபல மலையாள நடிகை அபர்ணா தாஸ். இவர் மலையாளத்தில் பகத் பாசில் நடித்து வெளியான ஞான் பிராக்சன் என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். இதைத் தொடர்ந்து தமிழில் இயக்குனர் நெல்சன் இயக்கிய ''பீஸ்ட்'' படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்தார்.

இந்த படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான அபர்ணா தாஸ், ''டாடா'' படத்தில் கதாநாயகியாக நடித்தார். கவின் ஜோடியாக இவர் நடித்த இந்த படம் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், சமீபத்தில் கன்னியாகுமரிக்கு சென்ற அபர்ணா தாஸ், அங்கு எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அதனுடன், கன்னியாகுமரியில் தான் ஒரு தமிழ் பெண்ணைப்போல உணர்ந்ததாக தெரிவித்திருக்கிறார்.

Tags:    

மேலும் செய்திகள்