'எதற்கும் துணிந்தவள் நான்.. எந்த விமர்சனங்களும் என்னை கட்டுப்படுத்தாது'- ஊர்பி ஜாவேத்

எந்த விமர்சனங்களும் தன்னை ஒன்றும் செய்துவிட முடியாது என்று நடிகை ஊர்பி ஜாவேத் கூறியுள்ளார்.;

Update:2025-07-05 14:14 IST

மும்பை,

பாலிவுட் நடிகையான ஊர்பி ஜாவேத், சர்ச்சைகளுக்கு பெயர் போனவர். சமூக வலைத்தளங்களில் தன்னை முன்னிலைப்படுத்த கையில் கிடைக்கும் பொருட்களை உடையாக அணிந்து வீடியோ வெளியிட்டு வருகிறார். அந்தவகையில் பிளாஸ்டிக் பாட்டில், செய்தி தாள்கள், வாழைப்பழ தோல்கள் என பல பொருட்கள் அவரது கவர்ச்சி உடைகளாக மாறியிருக்கின்றன. இதற்கிடையில் எந்த விமர்சனங்களும் தன்னை ஒன்றும் செய்துவிட முடியாது என்று அவர் கூறியுள்ளார்.

'வாழ்க்கை பாதை எளிதல்ல. பல தடவை மனம் உடைந்துள்ளேன். விமர்சனங்களையும், கொலை-கற்பழிப்பு மிரட்டல்களையும் எதிர்கொண்டுள்ளேன். ஆனாலும் எதற்கும் துணிந்தவள் நான். எந்த விமர்சனங்களும் என்னை கட்டுப்படுத்தாது. இந்த உலகுக்கு முக்கியமானவள் நான்' என்று ஊர்பி ஜாவேத் கூறியுள்ளது பரபரப்பாக பேசப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்