'பத்ம விருதை முன்பே பெற்றிருக்க வேண்டும்...ஆனால்' - நடிகர் பாலகிருஷ்ணா
நடிகர் பாலகிருஷ்ணா பத்ம பூஷன் விருதை நேற்று டெல்லியில் பெற்றார்.;
சென்னை,
நடிகரும் அரசியல்வாதியுமான நந்தமுரி பாலகிருஷ்ணா, இந்தியாவின் மூன்றாவது உயரிய விருதான பத்ம பூஷன் விருதை நேற்று டெல்லியில் பெற்றார். குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடமிருந்து பாலகிருஷ்ணா இந்த உயரிய விருதை பெறும் புகைப்படங்கள் மற்றும் வீடியோகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.
பதம் பூஷன் விருது குறித்து பாலகிருஷ்ணா பேசுகையில், "எனது ரசிகர்களுக்கும் இந்திய அரசுக்கும் மிக்க நன்றி. பத்ம விருதை முன்பே பெற்றிருக்க வேண்டும் என்று மக்கள் அடிக்கடி என்னிடம் கூறினர். ஆனால் இதுதான் சரியான நேரம் என்று அவர்களுக்கு சொல்ல விரும்புகிறேன்.
நான் சமீபத்தில் ஒரு நடிகராக 50 ஆண்டுகளை நிறைவு செய்தேன். மேலும் இந்துபூர் தொகுதியில் தொடர்ந்து 3 முறை வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக இருக்கிறேன். தொடர்ச்சியாக நான்கு வெற்றிப் படங்களைக் கொடுத்திருக்கிறேன்' என்றார்.