''அந்த நடிகையுடன் இன்னும் அதிக படங்கள் நடிக்க ஆசை'' - வருண் தவான்

வருண் தவான் தற்போது நடித்திருக்கும் படம் ''சன்னி சன்ஸ்காரி கி துளசி குமாரி''.;

Update:2025-09-17 12:48 IST

சென்னை,

பிரபல பாலிவுட் நடிகர் வருண் தவான். இவர் தற்போது நடித்திருக்கும் படம் ''சன்னி சன்ஸ்காரி கி துளசி குமாரி''. இதில் இவருடன் ஜான்வி கபூர், சன்யா மல்கோத்ரா, ரோஹித் சரப், மனீஷ் மல்ஹோத்ரா மற்றும் அக்சய் ஓபராய் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர்.

வருண் மற்றும் ஜான்வி இணைந்து நடிக்கும் இரண்டாவது படம் இதுவாகும். இப்படம் அக்டோபர் 2-ம் தேதி வெளியாக உள்ளநிலையில், கடந்த திங்களன்று மும்பையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது.

அதில் பேசிய வருண், சன்யா மல்கோத்ராவை வெகுவாக பாராட்டினார். சன்யாவுடன் இன்னும் நிறைய படங்களில் நடிக்க விரும்புவதாக தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்