சிரஞ்சீவியின் மகளாக நடிக்கும் கீர்த்தி ஷெட்டி?
கீர்த்தி ஷெட்டி தற்போது தமிழ் படங்களில் பிஷியான கதாநாயகியாக வலம் வருகிறார்.;
சென்னை,
சிரஞ்சீவி மற்றும் இயக்குனர் பாபி இரண்டாவது முறையாக இணைந்து பணியாற்ற உள்ளனர். இப்படம் அப்பா-மகள் உறவை சுற்றி வருவதாக கூறப்படுகிறது.
இதில் இளம் நடிகை கீர்த்தி ஷெட்டி, சிரஞ்சீவியின் மகளாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. விரைவில் இது பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தெலுங்கு நடிகையான கீர்த்தி ஷெட்டி தற்போது தமிழ் படங்களில் பிஷியான கதாநாயகியாக வலம் வருகிறார். கார்த்தியுடன் அவர் நடித்துள்ள ’வா வாத்தியார்’ படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியானது. மேலும், ’எல்ஐகே’ மற்றும் ’ஜீனி’ ஆகிய இரண்டு படங்கள் வரும் நாட்களில் வெளியாக உள்ளன.