தொடர்ந்து தள்ளிப்போகும் 'கருப்பு' படம்.. வெளியாவது எப்போது?

'கருப்பு' படத்தின் ரிலீஸ் தொடர்ந்து தள்ளிப்போய் கொண்டிருக்கிறது.;

Update:2026-01-21 08:46 IST

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த 'ரெட்ரோ' படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதையடுத்து ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் 'கருப்பு' என்ற படத்தில் சூர்யா நடித்து முடித்துள்ளார். திரிஷா கதாநாயகியாக நடிக்கிறார். அனகா, இந்திரன்ஸ், நட்டி நட்ராஜ், சுவாசிகா என பலரும் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் ‘காட் மோட்' பாடல் ஏற்கனவே வெளியாகியிருந்த நிலையில், விரைவில் இரண்டாம் பாடலும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

‘கருப்பு' படம் கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு முன்பாக வெளியாவதாக இருந்தது. பின்னர் தீபாவளி, புத்தாண்டு, பொங்கல் பண்டிகைக்கு வெளியிடலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும் படத்தின் ரிலீஸ் தொடர்ந்து தள்ளிப்போய் கொண்டிருக்கிறது.

இதற்கிடையில் கோடைக்கால வெளியீடாக ‘கருப்பு' படத்தை வருகிற ஏப்ரல் மாதம் திரைக்கு கொண்டுவர படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த முறையாவது படக்குழு திட்டம் பலிக்குமா? என்பதை பார்க்கலாம்.

Tags:    

மேலும் செய்திகள்