விரைவில் வெளியாகும் மம்முட்டியின் “களம்காவல்” திரைப்படம்

ஜிதின் கே ஜோஷ் இயக்கத்தில் ‘களம்காவல்’ படத்தில் மம்முட்டி, விநாயகன் நடித்து வருகின்றனர்.;

Update:2025-08-18 15:31 IST

மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகர்களுள் ஒருவர் மம்முட்டி. மம்மூட்டி நடிப்பில் சில மாதங்களுக்கு முன் வெளியான ‘டொமினிக் அண்ட் தி லேடிஸ் பர்ஸ்’ மற்றும் ‘பசூக்கா’ திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

அதனை தொடர்ந்து மம்முட்டி ‘களம்காவல்’ என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் மம்முட்டியுடன் இணைந்து விநாயகன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். குரூப், ஓஷானா படங்களுக்குக் கதை எழுதிய ஜிதின் கே ஜோஷ் இந்தப் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் மம்முட்டி இதுவரை பார்த்திராத கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், ‘களம்காவல்’ படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இத்திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளதாக மம்முட்டி அறிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்