கரண் ஜோஹரின் அடுத்த படத்தில் நாகமாக நடிக்கும் கார்த்திக் ஆர்யன்

கார்த்திக் ஆர்யன் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்திற்கு ‘நாக்ஜில்லா’ என பெயரிடப்பட்டுள்ளது.;

Update:2025-04-23 12:41 IST

மும்பை, 

பிரபல தயாரிப்பாளர் கரண்ஜோஹர். இவர் தர்மா புரொடக்சன்ஸ் என்ற நிறுவனத்தின் கிழ் பல வெற்றி படங்களை தயாரித்திருக்கிறார். இந்நிலையில், கரண் ஜோஹர் வழக்கமாக தயாரிக்கும் படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு படத்தை தற்போது தயாரிக்க உள்ளார்.

அதன்படி, கார்த்திக் ஆர்யன் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்திற்கு 'நாக்ஜில்லா' என பெயரிடப்பட்டுள்ளது. இதில் கார்த்திக் நாகமாக நடிக்கிறார். மிருகதீப் சிங் லம்பா இயக்கும் இப்படம் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாக உள்ளது.

இப்படத்தின் மோஷன் போஸ்டரை கரண்ஜோஹர் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அதில், சட்டை அணியாமல் கார்த்திக் ஆர்யன் பாம்பு நிறைந்த குகையில் இருந்து நகரத்தைப் பார்க்கிறார். மேலும் செதில்கள் நிறைந்த, பச்சை நிற பாம்பு போன்ற தோல்களையும் அவர் கொண்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்