ஒரே படத்தில் 45 வேடங்கள்...கின்னஸ் சாதனை படைத்த நடிகர் - யார், எந்த படம் தெரியுமா?
இவர் ஒரே படத்தில் 45 வெவ்வேறு கதாபாத்திரங்களில் நடித்து கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்தார்.;
சென்னை,
ஒரே படத்தில் பல வேடங்களில் நடித்தவர் என்று கூறும்போது நமக்கு தசாவதாரத்தில் 10 வேடங்களில் நடித்து மக்களை ஆச்சரியப்படுத்திய கமல்ஹாசன் பெயர்தான் முதலில் நினைவுக்கு வரும். ஆனால், அதையும் தாண்டி ஒரே படத்தில் 45 வேடங்களில் நடித்திருக்கிறார் ஒரு நடிகர்.
அந்த நடிகர் ரஜினிகாந்த் அல்லது விக்ரம் இல்லை, ஜான்சன் ஜார்ஜ். அவர் ஒரே படத்தில் 45 வெவ்வேறு கதாபாத்திரங்களில் நடித்து கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்தார்.
கடந்த 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் வெளியான மலையாளத் திரைப்படமான ஆரணு நஞ்சனில் 45 தனித்துவமான வேடங்களில் நடித்து ஜான்சன் ஜார்ஜ் வரலாறு படைத்தார். பி.ஆர். உன்னிகிருஷ்ணன் இயக்கிய இந்த படத்தில், ஜான்சன் ஜார்ஜ் மகாத்மா காந்தி, இயேசு கிறிஸ்து, சுவாமி விவேகானந்தர் , லியோனார்டோ டா வின்சி போன்ற பல வேடங்களில் நடித்தார்.