'பதான் 2' - மீண்டும் இணையும் ஷாருக்கான், தீபிகா படுகோன்?

கடந்த 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியான பதான் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.;

Update:2025-02-28 09:43 IST

சென்னை,

இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான், தீபிகா படுகோன் மற்றும் ஜான் ஆபிரகாம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த படம் பதான். கடந்த 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியான பதான் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான தயாரிப்பு பணிகள் தொடங்கியுள்ளதாக தெரிகிறது. இதில், முதல் பாகத்தில் நடித்த ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீண்டும் நடிப்பார்கள் என்றும் ஆனால், இயக்குனராக சித்தார்த் ஆனந்த் இருக்க மாட்டார் எனவும் கூறப்படுகிறது.

தற்போது பதான் 2 படத்திற்கான கதையை ஆதித்யா சோப்ரா முடித்துவிட்டதாகவும் அடுத்த ஆண்டு முதல் பாதியில் படப்பிடிப்பு தொடங்கும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்