ஜெயிலர் 2 படப்பிடிப்பில் இணைந்த ரஜினி...ஹுக்கும் பாட்டு போட்டு வரவேற்பு - வீடியோ வைரல்
கேரளாவின் கோழிக்கோட்டில் 'ஜெயிலர் 2' படப்பிடிப்பு துவங்கி இருக்கிறது.;
திருவனந்தபுரம்,
வருகிற ஆகஸ்ட் மாதம் 14-ம் தேதி வெளியாக இருக்கும் 'கூலி' படத்தின் படப்பிடிப்பை முடித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தற்போது தனது அடுத்த படமான 'ஜெயிலர் 2' படப்பிடிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
கோவை மற்றும் கேரளாவின் எல்லை பகுதியில் நடந்து வந்த இப்படப்பிடிப்பு தற்போது கேரளாவின் கோழிக்கோட்டில் துவங்கி இருக்கிறது. இதற்காக ரஜினி அங்கு சென்றிருக்கிறார். தனியார் நட்சத்திர ஓட்டலில் தங்கி இருந்து இப்படப்பிடிப்பில் ரஜினி ஈடுபட உள்ளார். 20 நாட்கள் இப்படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், அங்கு சென்ற ரஜினியை 'ஹுக்கும்' பாட்டு போட்டு படக்குழுவினர் வரவேற்றிருக்கின்றனர். அது குறித்த வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது. கோழிக்கோட்டின் செருவனூரில் உள்ள சுதர்சன் பங்களாவில் 'ஜெயிலர் 2' படப்பிடிப்பு நடந்து வருவதாக கூறப்படுகிறது.