46 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணையும் ரஜினி- கமல்?

ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவரும் பல படங்களில் ஒன்றாக நடித்திருக்கிறார்கள்.;

Update:2025-08-19 13:30 IST

சென்னை,

இயக்குனர் லோகேஷ் கனகராஜின் அடுத்த படத்தில் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவரும் நடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இது ஒரு கேங்ஸ்டர் படமாக இருக்கும் என்று தெரிகிறது.

ரஜினிகாந்த்-லோகேஷ் கூட்டணியில் உருவான 'கூலி' திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றபோதிலும் பாக்ஸ் ஆபீஸில் வரவேற்பை பெற்று வருகிறது. அதே சமயம், கமல்ஹாசனின் 'தக் லைப்' படம் பாக்ஸ் ஆபீஸில் தோல்வியடைந்தது. இந்நிலையில் இருவரும் இணைய இருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த படத்தை ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது நடக்கும் பட்சத்தில் ரஜினியும் கமலும் சுமார் 46 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒன்றாக நடிக்கும் படமாக இது இருக்கும்.

ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவரும் பல படங்களில் ஒன்றாக நடித்திருக்கிறார்கள். 'அபூர்வ ராகங்கள்', 'மூன்று முடிச்சு, 'அவர்கள்', 'பதினாறு வயதினிலே' , 'நினைத்தாலே இனிக்கும்' ஆகியவை அதில் அடங்கும். அவர்கள் கடைசியாக 1979-ல் 'அலாவுதீனும் அற்புத விளக்கும்' திரைப்படத்தில் நடித்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்