சின்னத்திரை நடிகை அமுதா தற்கொலை முயற்சி

இந்த சம்பவம் தொடர்பாக விருகம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update:2025-05-01 12:56 IST

சென்னை,

சென்னை சாலிகிராம் பகுதியை சேர்ந்தவர் சின்னத்திரை துணை நடிகை அமுதா (வயது 28). இவர் பிரபல தொலைக்காட்சிகளில் ஒளிப்பரப்பாகும் பல்வேறு சீரியல்களில் நடித்துள்ளார். தற்போது 'கயல்' என்ற சீரியலில் நடித்து வருகிறார். சின்னத்திரை நடிகை அமுதா தன் கணவருடன் ஏற்பட்ட பிரச்சினையின் காரணமாக நீண்ட நாட்களாக மன அழுத்தத்தில் இருந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், நேற்று வீட்டில் தனியாக இருந்த அமுதா கழிவறையை சுத்தம் செய்ய பயன்படுத்தும் திரவத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதை அறிந்த அமுதாவின் தோழி, அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிகிறது. இதற்கிடையே, அமுதா தற்கொலை முயற்சி செய்த விவகாரம் தொடர்பாக விருகம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அமுதாவின் கணவரிடமும் விசாரணை நடைபெற்று வருவதாக தகவல் கிடைத்துள்ளது. பிரபல சின்னத்திரை நடிகை தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது சின்னத்திரை நடிகர் -நடிகைகள் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Full View
Tags:    

மேலும் செய்திகள்