இயக்குனராக அறிமுகமான ஆர்யன் கான் - பாராட்டிய சுஹானா கான்

ஆர்யன் கான், 'தி பா***ட்ஸ் ஆப் பாலிவுட்' என்ற வெப் தொடரின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி இருக்கிறார்.;

Update:2025-09-22 09:45 IST

சென்னை,

இயக்குனராக அறிமுகமாகி இருக்கும் ஆர்யன் கானை அவரது சகோதரியும் நடிகையுமான சுஹானா கான் பாராட்டி இருக்கிறார்.

ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான், நெட்பிளிக்ஸில் வெளியாகி இருக்கும் 'தி பா***ட்ஸ் ஆப் பாலிவுட்' என்ற வெப் தொடரின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி இருக்கிறார்.

கடந்த 18-ம் தேதி வெளியான இப்படத்தில் பாபி தியோல், லக்சயா, சாஹர் பம்பா, ராகவ் ஜுயால் மற்றும் மோனா சிங் ஆகியோர் இதில் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர்.

இந்த தொடர் தற்போது வரவேற்பை பெற்று வரும்நிலையில், நடிகை சுஹானா கான், ஆர்யன் கானை பாராட்டி இருக்கிறார். இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆர்யன் கானுடன் இருக்கும் புகைப்படத்தை பகிந்ர்து, எப்போதும் நம்பர் 1 என பதிவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்