'திரைத்துறையில் புதுமுகங்கள் எதிர்கொள்ளும் சவால்கள்' - நடிகை மணீஷா
திரைப்படத் துறையில் புதுமுகங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து மணீஷா பேசி இருக்கிறார்.;
ஐதராபாத்,
தெலுங்கில் கடந்த ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்ற 'பாலே உன்னதே' என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் மணீஷா கண்ட்கூர். தற்போது இவர் கன்னடத்தில் அறிமுகமாக உள்ளார். அதன்படி, டார்லிங் கிருஷ்ணாவுடன் இணைந்து, 'பிராட்' என்ற படத்தில் நடித்துது வருகிறார். இப்படத்தை ஷஷாங்க் இயக்குகிறார்.
இந்நிலையில், திரைப்படத் துறையில் புதுமுகங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து மணீஷா பேசி இருக்கிறார். அவர் கூறுகையில்,
"நான் முதலில் கன்னட படத்தில் நடிக்க ஆசைப்பட்டேன், ஆனால் அது நடக்கவில்லை. கன்னடம் மற்றும் தெலுங்கு இரண்டிலும் ஆடிஷனில் கலந்துகொள்வது கடினமாக இருந்தது. எனக்கு முதல் பட வாய்ப்பு கிடைக்கும் வரை பொறுமையுடனும் விடாமுயற்சியுடனும் காத்திருந்தேன்.
திரைப்படத் துறையில் புதுமுகங்கள் எதிர்கொள்ளும் முதல் சவால் ஆடிஷனில் தேர்ச்சி பெறுவது. அடுத்த சவால் படத்தில் ஒரு நடிகராக முத்திரை பதிப்பது. கன்னட திரைப்படத் திரையில் அதைச் செய்ய நான் ஆவலுடன் காத்திருக்கிறேன். இயக்குனர் ஷஷாங்க் சாரின் முந்தைய படங்களிலும் நடிக்க பல ஆடிஷனில் கலந்துகொண்டேன். ஆனால் எதுவும் நடக்கவில்லை. இறுதியாக அவரின் 'பிராட்' படத்தில் நடிக்க உள்ளேன்' என்றார்.