'குட் டே' படத்தின் டிரெய்லர் வெளியானது
அரவிந்தன் இயக்கியுள்ள 'குட் டே' படம் வருகிற 17ந் தேதி வெளியாக உள்ளது.;
சென்னை,
இயக்குனர் அரவிந்தன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் குட் டே. இந்த படத்தினை பிரித்விராஜ் ராமலிங்கம் தயாரித்துள்ளார். படத்திற்கான திரைக்கதையை பூர்ணா எழுதியுள்ளார்.
இதில், பிருதிவிராஜ் ராமலிங்கம், காளி வெங்கட், மைனா நந்தினி, போஸ் வெங்கட், பகவதி பெருமாள் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். காமெடி கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படம் வருகிற ஜூன் 17-ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில், குட் டே படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.