ராமர் மற்றும் ராவணன் வேடங்களில் நடித்த ஒரே நடிகர்...யார் தெரியுமா?
ராமர் மற்றும் ராவணன் ஆகிய இருவராகவும் நடித்த ஒரே ஹீரோ இவர்தான்.;
சென்னை,
ராமருக்கும் ராவணனுக்கும் இடையிலான போரை சீரியல்களும் திரைப்படங்களும் அழகாக சித்தரித்து காட்டியுள்ளன. பல நடிகர்கள் ராமர் மற்றும் ராவணன் வேடங்களில் நடித்துள்ளனர். ஆனால் இந்த இரு வேடங்களிலும் ஒரு நடிகர் நடித்திருக்கிறார்.
ராமர் மற்றும் ராவணன் இருவராகவும் நடித்த அந்த நடிகர் வேறு யாருமல்ல, மறைந்த நடிகர் நந்தமுரி தாரக ராமராவ்தான். இவர் ஜூனியர் என்டிஆரின் தாத்தா ஆவார். வெள்ளித்திரையில் ராமர் மற்றும் ராவணன் இருவராகவும் நடித்த ஒரே ஹீரோ இவர்தான்.
அவர் 1963-ம் ஆண்டு லவகுசா படத்தில் ராமராகவும், பூகைலாசா (1958) மற்றும் சீதா ராம கல்யாணம் (1961) போன்ற படங்களில் ராவணனாகவும் நடித்தார்.