நடிகர் நாஞ்சில் விஜயன் மீது திருநங்கை பாலியல் புகார்

நடிகர் நாஞ்சில் விஜயன் மீது திருநங்கை ஒருவர் சென்னை காவல் ஆணையரகத்தில் புகாரளித்துள்ளார்.;

Update:2025-09-08 15:07 IST

சென்னை,

விஜய் டிவி நிகழ்ச்சிகளில் காமெடியனாக பங்கேற்று பிரபலம் ஆனவர் நாஞ்சில் விஜயன். இவர், 2023 ஆம் ஆண்டு மரியா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் பெண் குழந்தை பிறந்தது.

இந்த நிலையில், நடிகர் நாஞ்சில் விஜயன் மீது திருநங்கை ஒருவர் சென்னை காவல் ஆணையரகத்தில் புகாரளித்துள்ளார். அதாவது, கடந்த 5 ஆண்டுகளாக நானும் அவரும் பழகினோம். தன்னுடன் பழகிய அவர், பாலியல் ரீதியாகப் பயன்படுத்திக் கொண்டு ஏமாற்றி விட்டதாக குற்றம் சாட்டியுள்ளார். இதற்கு நாஞ்சில் விஜயன் தரப்பிலிருந்து, அவர் யார் என்றே தெரியாது என்று பதிலளித்துள்ளனர்.  

Tags:    

மேலும் செய்திகள்